முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு...

மழை விட்டுச் சென்ற குளிர்

நீர்க்குமிழிகளின் நேசப் புன்னகையில் பிரதிபலிக்கிறது உன் முகம் சிறு காற்றசைவில் உதிர்ந்து விழும் இலைக் குவியலில் சலசலக்கிறது உன் மெளனம் மழை விட்டுச்சென்ற குளிரை மறக்கச் செய்கிறது உன் நெருக்கம் குளக்கரை கூழாங்கற்கள் சேகரித்த உன் நினைவுகள் தேங்கிடும் மழைச்சாரல் வழியும் மிகுதி உன் மகிழ்வுகள் மின் கம்பியில் படபடக்கும் இரட்டைவால் குருவி உன் குறும்புகள் குவளையின் இறுதி துளி தேநீர் உன் வசவுகள் உதிர்ந்த சில துளி சிரிப்புகள் உன்னால் நிகழ்த்தப்பட்ட என் மரணங்கள் மழை விட்டுச் சென்ற குளிர் நீ மறைகையில் உறைந்த என் மனம் கண்டெடுத்த உன் பிம்பம் கசக்கிய காகிதப் பூ கீறப்பட்டு கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கிடந்தது உன் ஓவியம் சிதறிக் கிடக்கிற உன் தேகத்தில் கொட்டப்படுகின்றன அனுதாபங்கள் நீதி உரிமை பாதுகாப்பு ஒலிக்கும் குரல்களில் மறைந்திருக்கிறது அவலம் போதும் நிறுத்திக் கொள்ளச் சொல்வோம் இச்சமூகத்தை இவர்கள் நல்லெண்ணத்தினால் மூச்சு முட்டுகிறது திணறும் எனக்கும் திகைக்கும் உனக்கும் கூட

உங்களின் நான்

உங்கள் முலைகளில் பால் அருந்தியவன் நான் உங்கள் மடிகளில் உறக்கம் தேடியவன் உங்கள் கைகளில் கோர்த்திருக்கின்றன என் விரல்கள் உங்கள் பாசத்தில் உணவு உருவாகிறது எனக்கு உங்கள் இடுப்பில் சுற்றியிருக்கின்றன என் கைகள் உங்கள் மதிப்பெண்களில் நிறைந்திருக்கிறது என் சான்றிதழ் உங்கள் நல விசாரிப்புகளில் உணர்கிறேன் என் வாழ்வை உங்களை விட்டு கட்டமைக்க முடியவில்லை என் காலத்தை ஏன் என் கவிதைகளில் கூட தொனிக்கிறது, உங்கள் சிரிப்பு. -பிரபா

இரவெனும் பறவை

இரவெனும் பறவை கொத்தி கொத்தி களித்திருக்கிறது கோடி வெளிச்சங்களை வானமெனும் கூரைமேல் விரித்திருக்கிறது தன் சிறகுகளை பகலவன் வரும்வரை விழித்திருக்கிறது நிலவு இரவுக்கு துணை நிசப்தங்களே அதன் அகவல் அணைக்கிறது பனியெனும் போர்வை கொண்டு தன்னைப் போலவே தனித்திருக்கும் உயிரிகளை போதும் நிறுத்திகொள் காலத்தேவன் குரல் கேட்கும் வரை பரந்திருக்கிறது, கடலாய் இரவெனும் பறவை... -பிரபா

கொண்டு வா ஓர் ரோஜா

கொண்டு வா ஓர் ரோஜா இதழ்கள் மாறி மாறி உதிர்த்துக் கொண்டிருக்கிறது உன் பெயரை இருவிழிகள் என்னை மீறிமீறி தேடிக் கொண்டிருக்கிறது உன் உருவை இசையாய் விழுந்த உன் சிரிப்பில் கசையாய் பிணைந்த என் மனம் விசைகொண்டு மேலெழ வழியில்லையோ வெளி விழும் சொல் எல்லாம் கவிதையாய் காற்றில் கமழ்கிறது உன்னால் உள்ளெழும் உற்சாகம் உரமிட்டு உயிர்ப்பிக்கிறது உயிரை உன்னை காணும் முன்னால் கட்டிக் கொண்டாய் கைகளை மார்போடு முகிழ்ந்த உன் இறுக்கத்தில் முட்டிமோதி நுழையும் காற்றாய் நானாயிருக்க கூடாதா ஏன் என்னை பெயர்த்துச் சென்றாய் உன்னோடு மீண்டு வந்து தந்துவிடு வாழ முயல்வேன் மீதி உயிரோடு குளிர்ந்த தருவில் விளைந்த நற்கனியே உன் எழிலில் சிதைந்த வினைஞன் நான் கட்டிப் போட்டு உருட்டுக்கட்டை கொண்டு சாத்தினாலும் முகமலரும் உன் சந்தம் இருந்தால் நான் சாகமாட்டேனே அன்பு கொண்டு அலைந்த இந்தற்பனை காண செய்வாய் சொர்க்க கற்பனை எழுத எழுத நீளும் இப்பாடல் கேட்க கேட்க உன்னைக் கொன்று விட்டால் எழும் போது எடுத்து வா ஓர் ரோஜா... ஓ, ரோஜா... -பிரபா

நட்பின் பயணம்

எத்தனையோ முறை நட்பு என்கிற சொல் என்னால் எள்ளி நகையாடப்பட்டிருக்கிறது. பல முறை உண்மையான நட்பு என்பதை அலட்சியப்படுத்திருக்கிறேன். நண்பர்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாதவனாய் நானிருந்திருக்கிறேன் என்பது எனக்கே கடினமான ஒன்றாக தோன்றுகிறது இன்று. அப்படி என்ன நடந்து விட்டது... உண்மையான நட்பின் ஆசுவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதகதப்பு என்னை ஆறுதலாய் உணர வைக்கிறது. என்ன தவம் செய்தாயோ என புலம்ப வைக்கிறது. காற்றில் எழும் சங்கீதம் செவியில் அறைந்தால் தானே இசை. இந்த செவிடனுக்கு உணர்த்தும் விதமாய் அறைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது நட்பெனும் முரசு. அலைகடல் எல்லாம் எனக்காகவே பொங்கி கொண்டிருக்கிறது. நிலவொளி எங்கும் எனக்காகவே படர்ந்து கொண்டிருக்கிறது. என் உணர்வுகளை கடத்தவே பனி உங்களையும் போர்த்தியிருக்கிறது. வீதியெங்கும் அலறிக் கொண்டே ஓட வேண்டும் போல தோன்றுகிறது. இது ஒரு வகையான புது உணர்வாய் தோன்றுகிறது. ஏதோவொரு மைய விசை பிணைத்து இணைத்து வேடிக்கை பார்க்கிறது. ஒரு நேரம் சிரிக்கவும் ஒரு நேரம் அழவும் ஒரு நேரம் கோபப்படவும் ஒரு நேரம் அணைக்கவும் செய்ய சொல்கிறது, உடலில் கோர்க்க...

கவிகள் பூக்கும் கானகம்

மீண்டும் மீண்டும் தேடியலைகிறேன் சொற்கள் கனியும் தருக்கள் நிறைந்த கானக வெளியை எழுத்துகளை ஊட்டி சொற்களைப் பூக்கும் திறன் கொண்டிருக்கும் மரங்கள் செறிந்தது அக்கானகம் அவை உதிர்க்கும் கனிகளும் கவி வித்துகளாய் தரையில் படரும் பொன்னிற நிலா உதிர்க்கும் பனித் தூறலில் நனையும் மரங்களிடை புகுந்து வரும் காற்றிலும் கலந்திருக்கும் சங்கீத வாசனை காவலாய் அக்கானகத்தை சூழ்ந்திருக்கும் வேங்கையிடம் கூட முறையிட்டு பார்த்துவிட்டேன் முறைத்துக் கொண்டே கடக்கிறது உறுமல் முயன்று முயன்று பார்க்கிறேன் எட்ட மறுத்து விலகி விலகி ஓடுகிறது பேராற்றலின் திருவுருவம் சிந்தனைக்கும் அப்பாற்பட்டு முடுக்கி விடுகிறேன் மூளையின் வேகத்தை அகப்பட மறுக்கிறது நுழைவாயில் எல்லாம் அவ்வளவுதான் என களைத்து இளைத்து அமரும் தருவாயில் ஓங்கி அறைகிறது கனவு வெளி

காதலினால் ஆதல்

அவள் : அப்புறம் அவன் : ஒண்ணும் இல்ல அவள் : ஒண்ணுமே இல்லையா... அவன் : ஆமா. ஒண்ணுமே இல்லை அவள் : சரி வச்சுடுறேன் அவன் : இல்லை இல்லை இருக்கு அவள் : இல்லையா இருக்கா அவன் : இருக்கு அவள் : அப்ப சொல்லு அவன் : எல்லாமே நீ தான் அவள் : வேற அவன் : நீயின்றி எதுவுமில்லை அவள் : வேற அவன் : உன்னால் தான் நான் வாழ்வது அவள் : வேற வேற புதுசா ஏதாவதுடா அவன் : புதுசாவா... அவள் : ம் அவன் : ஆசைகள் கோடி அவள் : ம் அவன் : அதை நிறைவேற்ற நீ வாடி அவள் : போடா அவன் : நீ வரலைனா நான் வருவேன் தேடி அவள் : ஹா... ஹா... அவன் : உன் சிரிப்பில் நான் உடைந்த ஜாடி அவள் : சூப்பர்டா அவன் : நீ என் வாழ்வில் நுழைந்த மறுகணம் நான் தொலைகிறேன் தினம் தினம் நீயின்றி நானிங்கு வெறும் பிணம் நீ தான் எனைச் சூழும் மலர்வனம் அவள் : பாட்டாவே பாடுறீயா... கண்கள் கொண்டு சிறை பிடித்தாய் வண்ணங்கள் காட்டி விடுதலை கேட்டேன் வார்த்தைகள் உதிர்த்து வலை விரித்தாய் விரும்பி நானும் விழுந்து விட்டேன் கைக்குட்டை நூலாய் சுருக்கி விட்டாய் - உன் கைமீறி போக நான் விரும்பவில்லை மூச்சுக் காற்றில் நனைய செய்தாய் மூன்று நாளாய் பிடி...

தீப்பற்றி எரியும் பனி

தனிமையின் இறுக்கத்தில் உன் நெருக்கத்தை உணருகிறேன் அடர் பனி கோதும் என் வெற்றுடம்பில் படர்ந்திருக்கின்றன கீறல்கள் இரக்கமற்று வீழ்த்தப்பட்ட நிலையில் கிடக்கிறேன் சடலமாய் சிதைகாயங்களில் உணவு தேடியலைகின்றன ஈக்களும் வண்டுகளும் ஒட்டுண்ணிகளும் தன் விருப்பத்திற்கு விளையாடுகிறது என்னைப் போலவே மெருதுவான பனி பிரக்ஞைகள் ஏதுமற்றே நான் இன்னும் சற்றுநேரத்தில் என்னைச் சுற்றி பெருந்திரள் கூடிவிடும் காக்கி உடைகளும் வெள்ளை உடைகளும் வரத்தான் போகின்றன நான் எவ்வாறு அடையாளம் காட்டுவேன் யாரை சாட்சிக்கு அழைத்து வருவேன் காற்றைக் கிழித்த என் கதறல்களை கேட்டு நின்றது நடுநிசி இரவு மட்டுமே அதுவும் செய்வதறியாது கண்ணீராய் பனியை சிந்திக் கொண்டிருந்தது என்னை மொய்க்கும் கேமரா கண்களின் வழியே காணும் கோடி ஜோடி கண்களில் நீயுமிருப்பாய் கனவுகூட கண்டிருக்க மாட்டாய் தான் உன் வரவேற்பறையில் நான் இப்படி நுழைவதை சகித்துக் கொள்ள கூட முடியாது தான் உன் கதாநாயகி கூவ நதியின் ஓரத்தில் கொப்பளிக்கும் நாற்றத்தி...