முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறுகதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நா...

மலர்: அத்தியாயம் ஒன்று

1 காத்திருக்கும் நேரம் கூடிக் கொண்டே போனது. கலந்தாய்வு எப்போ தொடங்கும் என தெரியவில்லை. காலை எட்டு மணியில் இருந்து நின்று கால் வலிக்க தொடங்கியது. பரந்து விரிந்திருந்த ஆடிடோரியத்தின் பக்கவாட்டு வாசலின் முன்பு ஆயிரக்கணக்கில் மாணவர் திரள். கையில் பைல்களோடும் கண்களில் கனவுகளோடும். அம்மாக்கள் , அப்பாக்கள் , சிலருக்கு தாத்தா, பாட்டி, கார்டியன் இப்படி. மஞ்சள் நிறப் பூக்களும் உதிர்ந்த இலைகளின் சருகுகளும் கலந்து அந்த இடத்தை நிரப்பி இருந்தது. முதல் அறிவிப்பு வெளியானது. மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிந்து நிற்க சொல்லி. கட்ஆப் மேலிருந்து கீழ் நோக்கிய வரிசையில். மாணவர்கள் எதற்கோ கட்டுப்பட்டவர்கள் போல அறிவிப்பைத் தொடர்ந்து பரபரப்போடு வரிசை பிரிந்து நின்றோம். அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து அதை விட 20 குறைந்த மதிப்பெண் வரை முதலில் உள்ளே அழைத்தார்கள். எல்லோரும் பி.காம் எடுக்க விரும்பினோம். முதல் இருபதில் என் பெயர் இருந்ததில் வியப்பேதும் இல்லை. பத்து , பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கும்போது மதிப்பெண் தான் எல்லாமும் என்று சொல்லித் தரப்பட்ட அறிவுரைகளினால் படித்து கொண்டே இருந்தத...

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு ...