முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொண்டு வா ஓர் ரோஜா

கொண்டு வா ஓர் ரோஜா இதழ்கள் மாறி மாறி உதிர்த்துக் கொண்டிருக்கிறது உன் பெயரை இருவிழிகள் என்னை மீறிமீறி தேடிக் கொண்டிருக்கிறது உன் உருவை இசையாய் விழுந்த உன் சிரிப்பில் கசையாய் பிணைந்த என் மனம் விசைகொண்டு மேலெழ வழியில்லையோ வெளி விழும் சொல் எல்லாம் கவிதையாய் காற்றில் கமழ்கிறது உன்னால் உள்ளெழும் உற்சாகம் உரமிட்டு உயிர்ப்பிக்கிறது உயிரை உன்னை காணும் முன்னால் கட்டிக் கொண்டாய் கைகளை மார்போடு முகிழ்ந்த உன் இறுக்கத்தில் முட்டிமோதி நுழையும் காற்றாய் நானாயிருக்க கூடாதா ஏன் என்னை பெயர்த்துச் சென்றாய் உன்னோடு மீண்டு வந்து தந்துவிடு வாழ முயல்வேன் மீதி உயிரோடு குளிர்ந்த தருவில் விளைந்த நற்கனியே உன் எழிலில் சிதைந்த வினைஞன் நான் கட்டிப் போட்டு உருட்டுக்கட்டை கொண்டு சாத்தினாலும் முகமலரும் உன் சந்தம் இருந்தால் நான் சாகமாட்டேனே அன்பு கொண்டு அலைந்த இந்தற்பனை காண செய்வாய் சொர்க்க கற்பனை எழுத எழுத நீளும் இப்பாடல் கேட்க கேட்க உன்னைக் கொன்று விட்டால் எழும் போது எடுத்து வா ஓர் ரோஜா... ஓ, ரோஜா... -பிரபா

நட்பின் பயணம்

எத்தனையோ முறை நட்பு என்கிற சொல் என்னால் எள்ளி நகையாடப்பட்டிருக்கிறது. பல முறை உண்மையான நட்பு என்பதை அலட்சியப்படுத்திருக்கிறேன். நண்பர்கள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாதவனாய் நானிருந்திருக்கிறேன் என்பது எனக்கே கடினமான ஒன்றாக தோன்றுகிறது இன்று. அப்படி என்ன நடந்து விட்டது... உண்மையான நட்பின் ஆசுவாசத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதகதப்பு என்னை ஆறுதலாய் உணர வைக்கிறது. என்ன தவம் செய்தாயோ என புலம்ப வைக்கிறது. காற்றில் எழும் சங்கீதம் செவியில் அறைந்தால் தானே இசை. இந்த செவிடனுக்கு உணர்த்தும் விதமாய் அறைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது நட்பெனும் முரசு. அலைகடல் எல்லாம் எனக்காகவே பொங்கி கொண்டிருக்கிறது. நிலவொளி எங்கும் எனக்காகவே படர்ந்து கொண்டிருக்கிறது. என் உணர்வுகளை கடத்தவே பனி உங்களையும் போர்த்தியிருக்கிறது. வீதியெங்கும் அலறிக் கொண்டே ஓட வேண்டும் போல தோன்றுகிறது. இது ஒரு வகையான புது உணர்வாய் தோன்றுகிறது. ஏதோவொரு மைய விசை பிணைத்து இணைத்து வேடிக்கை பார்க்கிறது. ஒரு நேரம் சிரிக்கவும் ஒரு நேரம் அழவும் ஒரு நேரம் கோபப்படவும் ஒரு நேரம் அணைக்கவும் செய்ய சொல்கிறது, உடலில் கோர்க்க

பண்பாட்டு நகரமும் புத்தக திருவிழாவும்

காரைக்குடி 11/02/2017 காரைக்குடியில் புத்தக திருவிழா என்று கேள்விபட்டதும் காற்றில் எகிறிக் குதித்த என் மனதின் உற்சாகம் நேரில் அதன் தோற்றத்தை கண்டவுடன் ஊசியின் முனைப்பட்ட பலூன் போல சுருங்கி இளைத்து பின் மொத்தமாக மடிந்துவிட்டது. கலை இலக்கிய நகரமான காரைக்குடியிலும் புதுக்கோட்டையிலும் தான் பல ஆரம்ப கால பதிப்பகங்களும் அச்சுக் கூடங்களும் தொடங்கப்பட்டு இயங்கி வந்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் இந்த புத்தக திருவிழாவைப் பார்த்த யாருக்கும் அதன் மேல் கேள்வி எழுவதற்கான வாய்ப்பு உண்டு. கம்பன் மணிமண்டபத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருந்த புத்தக திருவிழாவுக்கு சென்ற போது உண்மையாகவே அதிர்ந்து போனேன். விளம்பரத்தில் 50 அரங்குகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு இருந்தது 20 க்கும் குறைவான புத்தக விற்பனையாளர்களே. பதிப்பகங்கள் என்று பார்த்தால் கிழக்கை தவிர யாரும் இல்லை. காரைக்குடியில் இயங்கி வரும் CBSE தர பள்ளிகள் சில இடம்பெற்றிருந்தன. கோவிலூர் மடாலயம் சார்பில் ஒன்றும் குன்றக்குடி அடிகளார் சார்பில் ஒரு அரங்கமும் எடுக்கப்பட்டிருந்தது. தவிர்த்து காரைக்குடியில் இயங்கி வரும் வள்ளி புத்தகாலயம்,

கவிகள் பூக்கும் கானகம்

மீண்டும் மீண்டும் தேடியலைகிறேன் சொற்கள் கனியும் தருக்கள் நிறைந்த கானக வெளியை எழுத்துகளை ஊட்டி சொற்களைப் பூக்கும் திறன் கொண்டிருக்கும் மரங்கள் செறிந்தது அக்கானகம் அவை உதிர்க்கும் கனிகளும் கவி வித்துகளாய் தரையில் படரும் பொன்னிற நிலா உதிர்க்கும் பனித் தூறலில் நனையும் மரங்களிடை புகுந்து வரும் காற்றிலும் கலந்திருக்கும் சங்கீத வாசனை காவலாய் அக்கானகத்தை சூழ்ந்திருக்கும் வேங்கையிடம் கூட முறையிட்டு பார்த்துவிட்டேன் முறைத்துக் கொண்டே கடக்கிறது உறுமல் முயன்று முயன்று பார்க்கிறேன் எட்ட மறுத்து விலகி விலகி ஓடுகிறது பேராற்றலின் திருவுருவம் சிந்தனைக்கும் அப்பாற்பட்டு முடுக்கி விடுகிறேன் மூளையின் வேகத்தை அகப்பட மறுக்கிறது நுழைவாயில் எல்லாம் அவ்வளவுதான் என களைத்து இளைத்து அமரும் தருவாயில் ஓங்கி அறைகிறது கனவு வெளி

காதலினால் ஆதல்

அவள் : அப்புறம் அவன் : ஒண்ணும் இல்ல அவள் : ஒண்ணுமே இல்லையா... அவன் : ஆமா. ஒண்ணுமே இல்லை அவள் : சரி வச்சுடுறேன் அவன் : இல்லை இல்லை இருக்கு அவள் : இல்லையா இருக்கா அவன் : இருக்கு அவள் : அப்ப சொல்லு அவன் : எல்லாமே நீ தான் அவள் : வேற அவன் : நீயின்றி எதுவுமில்லை அவள் : வேற அவன் : உன்னால் தான் நான் வாழ்வது அவள் : வேற வேற புதுசா ஏதாவதுடா அவன் : புதுசாவா... அவள் : ம் அவன் : ஆசைகள் கோடி அவள் : ம் அவன் : அதை நிறைவேற்ற நீ வாடி அவள் : போடா அவன் : நீ வரலைனா நான் வருவேன் தேடி அவள் : ஹா... ஹா... அவன் : உன் சிரிப்பில் நான் உடைந்த ஜாடி அவள் : சூப்பர்டா அவன் : நீ என் வாழ்வில் நுழைந்த மறுகணம் நான் தொலைகிறேன் தினம் தினம் நீயின்றி நானிங்கு வெறும் பிணம் நீ தான் எனைச் சூழும் மலர்வனம் அவள் : பாட்டாவே பாடுறீயா... கண்கள் கொண்டு சிறை பிடித்தாய் வண்ணங்கள் காட்டி விடுதலை கேட்டேன் வார்த்தைகள் உதிர்த்து வலை விரித்தாய் விரும்பி நானும் விழுந்து விட்டேன் கைக்குட்டை நூலாய் சுருக்கி விட்டாய் - உன் கைமீறி போக நான் விரும்பவில்லை மூச்சுக் காற்றில் நனைய செய்தாய் மூன்று நாளாய் பிடி

தீப்பற்றி எரியும் பனி

தனிமையின் இறுக்கத்தில் உன் நெருக்கத்தை உணருகிறேன் அடர் பனி கோதும் என் வெற்றுடம்பில் படர்ந்திருக்கின்றன கீறல்கள் இரக்கமற்று வீழ்த்தப்பட்ட நிலையில் கிடக்கிறேன் சடலமாய் சிதைகாயங்களில் உணவு தேடியலைகின்றன ஈக்களும் வண்டுகளும் ஒட்டுண்ணிகளும் தன் விருப்பத்திற்கு விளையாடுகிறது என்னைப் போலவே மெருதுவான பனி பிரக்ஞைகள் ஏதுமற்றே நான் இன்னும் சற்றுநேரத்தில் என்னைச் சுற்றி பெருந்திரள் கூடிவிடும் காக்கி உடைகளும் வெள்ளை உடைகளும் வரத்தான் போகின்றன நான் எவ்வாறு அடையாளம் காட்டுவேன் யாரை சாட்சிக்கு அழைத்து வருவேன் காற்றைக் கிழித்த என் கதறல்களை கேட்டு நின்றது நடுநிசி இரவு மட்டுமே அதுவும் செய்வதறியாது கண்ணீராய் பனியை சிந்திக் கொண்டிருந்தது என்னை மொய்க்கும் கேமரா கண்களின் வழியே காணும் கோடி ஜோடி கண்களில் நீயுமிருப்பாய் கனவுகூட கண்டிருக்க மாட்டாய் தான் உன் வரவேற்பறையில் நான் இப்படி நுழைவதை சகித்துக் கொள்ள கூட முடியாது தான் உன் கதாநாயகி கூவ நதியின் ஓரத்தில் கொப்பளிக்கும் நாற்றத்தி

நிர்பயா, சுவாதி, நந்தினி... அடுத்து தீக்கிரையாவது யாரெனத் தெரியும் வரை அமைதி காக்கப் போகிறோமா?

“தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு” உலகமெங்கிலும் தங்கள் பண்பாட்டை காக்க தொடர்ந்து அறவழியில் போராடி தமிழர்கள் மீதான பார்வையை மாற்றியமைத்த தமிழ் பேசும் நன்மக்கள் கலைந்து சென்ற கடற்கரை மணலின் ஈரம் காயும் முன்... அரங்கேறியிருக்கிறது மற்றொரு கோரத் தாண்டவம், அரியலூரில். இதுபோன்ற பிரச்சனைகள் உருவாகிய பிறகு அவை குறித்து பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. விவாதிக்க மட்டுமே படுகிறது. செயல் வடிவத்திலோ கொள்கை வடிவத்திலோ அதற்கான தீர்வு எப்போதுமே பெறப்பட்டதில்லை. நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கொடூர நிகழ்வின் தீர்வு இன்று எந்த கட்டத்தில் இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மறதி தேசிய வியாதி- அதற்கேற்ப நேற்றைக்கான செய்தி இன்று வேண்டியதில்லை. ஏனெனில் நேற்றே நாம் போதுமான அளவிற்கு அதை பேசிவிட்டோம். இன்றைக்கான நடப்பு நிகழ்வின் நீரோட்டத்தில் தொற்றிக் கொள்ள வேண்டியது மட்டுமே நம் கடமை என்பது போலாகிவிட்டது. இந்த வைரல் என்பது பல நேரங்களில் செயற்கையாகவும் உருவாக்கப்பட்டுவிடுகிறது. சுயநலக் கிருமிகள் எளிதில் கிடைக்கும் இவ்விளம்

முகிழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு அரும்பின் மடல்

“ An oak tree is a daily reminder   that great things often have small beginnings. ” -Matshona Dhliwayo இடது கையை மேலாக தூக்கி கைபேசியை உயர்த்தி அதில் செருகப்பட்டிருக்கும் செல்ஃபி ஆப்பின் வழியே தன்னைத் தானே படம் எடுத்து உங்கள் பார்வைக்கு பதிவிடும் வழக்கமான செயலின் மாறுபட்ட வடிவம் தான் இந்த தளத்தின் தொடக்கம். அதில் என் முகத்தின் வழியே உணர்ச்சிகளைப் படிப்பீர்கள். இதில் எழுத்தின் வழியே. வேறுபாடு அவ்வளவே. இயற்கையாகவே நான் அதிகம் பேசக் கூடிய கதாபாத்திரம் இல்லை. அறிமுகமானவுடனே கவர்ந்து விடும் அளவிற்கு ஹாஸ்யம் கூட நிறைந்தவன் இல்லை. அந்த தயக்க குணமே என்னை எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் பிடிப்புள்ளவனாக்கியது. என்னிடமிருந்து எவ்விதமான செய்திக்கும் உடனடி எதிர்வினையும் எளிதில் கிடைத்து விடாது. நான் அதற்கிட்ட பெயர் சோம்பல். என் அப்பாவின் வார்த்தைகளின் படி 'ஃபிரசன்ஸ் ஆப் மைண்ட்' குறைவு. எந்த செயலுக்கும் ஒரு தூண்டுதல் உண்டு என்கிற அறிவியல் விதிப்படி இத்தளத்தின் தொடக்கத்திற்கும் ஒரு காரணம் உண்டு. நான் பேச விரும்புகிறேன் - இந்த ஒற்றை வரியிலிருந்து தான் முகிழ் என்கிற வ