முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கெங்கும் நீலம்

காணும் இடமெல்லாம் நீலம். பேரமைதியை அணிந்திருக்கிற கடலின் முகமெல்லாம் நீலம். விரிந்திருக்கும் அதன் எல்லையில் தொடங்கி மேலெழும் வானமெங்கிலும் நீலம்.  சூரியன் மறைந்த பிறகும் மீதமிருக்கும் வெளிச்சத்தில் இதமான கடற்காற்றின் குளிரில் கடலுக்கு பத்து அடிக்கு மேலிருந்து தடதடக்கும் தொடர்வண்டியின் கதவோரம் மிகச் சரியாக பத்து நிமிடங்கள் நேரம் செலவழிக்க நீங்கள் தயாராக இருந்தால் பதிலீடாக பெருவியப்பினையும்  இயற்கையின் மீதான பெரும்நம்பிக்கையையும் நாம் தான் இயற்கை, இயற்கை தான் நாம் என்பதனையும் உணர முடியும். தமிழ்நாட்டின் மண்டபம் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்தை இணைக்கும் பாம்பன் பாலத்தில் தான் அந்த பயணம். தமிழ்நாட்டின் நிலப்பரப்பிலிருந்து இராமேஸ்வரத்தை கடல் துண்டித்திருப்பினும் மொழி இணைத்திருக்கிறது. இந்த வாக்கியம் சரியா என எனக்கே குழப்பமாக இருக்கிறது. பலகைகளில் தொடங்கி முகங்கள் வரை தமிழைத் தேட வேண்டிய நிலை தான்.  கோவிலின் தரையெங்கும் வடமொழி வாசகங்கள். பலகை அனைத்திலும் தமிழுக்கும் சிறிதும் இடம் உண்டு.  சுற்றி சுற்றி மடங்கள். இராமேஸ்வரத்தினை இரண்டாக வகுந்து விட முடியும். புனித (?) தலம் ம

அடைபடும் நாட்குறிப்புகள் - 3

சூரியனை மறைக்கும் மேகக் கூட்டமளவிற்கான ஆறுதல் எனக்கு போதுமானது. புதிய சூழல் அப்படியான உலகை கட்டமைக்கிறது. புதிதாக ஒன்று இருப்பதாலேயே சில நேரங்களில் பிடித்துவிடும். அப்படியாகவே எல்லா நாட்களும் புதிதாகவே தொடர வேண்டும் என்று மனம் விரும்புகிறது. வீணான என் நேரத் துளிகளை பயன்படும் இடத்தில் செல்லதக்கதாக்கும் முயற்சி தான் இப்போது செயல்பட வைத்துக் கொண்டிருப்பது. மாற்றங்களே நம்மை இயக்குகிறது. கோபப்படும் போது குறையும் மூச்சு மழலையைக் கொஞ்சும் போது சீரடைகிறது. தூசுக்களைக் களைவதில் கழிந்தது இன்றைய நாள். தமிழராய் இருந்தாலே சுண்டலும், பொறியும் கூடுதல் உணவு இன்று. விசேஷங்களும் வழக்கமான அலுவல்களிலிருந்து சற்று விடுதலை தரும். அலுவல்கள் நூறு வருடம் முன்பும் இன்றும் வேறு வேறு. ஆனால் ஓய்வுக்கான விசேஷங்கள் மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் என்றும் ஒன்றே. முழு உலகத்திற்கான சாளரம் சிறிதே. பறக்கும் வரை பற்றியிருக்கும் சாளரத்தின் கம்பிகள் நம்பிக்கையளிப்பவை. ஒரு வகையில் உந்திவிடுபவை. சாளரம் வழி நீ காண்பதே இவ்வளவு வெளிச்சமெனில் பறக்க தொடங்கினால் என்று நம்பிக்கையளிப்பவை. ஆனால் காற்றின் போக்கு, கால

அடைபடும் நாட் குறிப்புகள் - 2

அனுபவங்களை அளிக்கவே இந்த உலகம் காலத் துளிகளால் அளவிடப்படுகிறது. ஒன்றை போல் இன்னொன்று இல்லை நாட்களில். இன்றும் இனி என்றைக்கும் அமையாத ஒன்று. சூரியன் வான கண்மாயில் மூச்சடக்கி மூன்றாவது நாள் இன்று. மழை சொட்டச் சொட்ட என் காலை தொடங்கியது. வகுப்புகளில் கவனத்தைக் குவித்து அமர்ந்திருந்தேன். ஆசிரியர்கள் தான் பாடமெடுக்க தயாராக இல்லை. செமினார் என்ற பெயரில் நான் வகுப்பின் முன் ஒன்றை பேசியாக வேண்டிய நிலை. தற்காலத்தில் பெண்கள் - தலைப்பு. அந்த பிரிவேளைக்கானவர் ஒரு பெண் ஆசிரியர். மற்றும் பெரியார் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை, தாம் காண்கிற பிரச்சினைகளுக்கு காரணமே பெண் சுதந்திரம் தான் என்கிற நம்பிக்கையை உடையவர். காலம் நகர்கிறது. புதிய பணி சூழல் பேரமைதி நிறைந்தது.  திடீரென விளக்கு அணைக்கப்பட்டால் இருளில் மறையும் விளக்கு பூச்சிகள் போல புதிய இடம் சற்று பதட்டம் அளிக்கிறது. காலம் நகர்கிறது. (17,அக்.2018 08:37)

அடைபடும் நாட்குறிப்புகள்-1

அண்டத்தை துலாக்கோலின் கம்பி போல நீட்டித்தால் அதன் ஒரு முனையை நான் பற்றியிருக்க மறு முனையில் எனது ஆதங்கங்கள், கவலைகள், சோர்வுகள், எதிர்பார்ப்புகள், கிட்டாத உவகைகள் என எல்லாமும் அழுத்திக் கொண்டிருக்க, பாரம் தாங்காது என் முனை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நானும் முடிந்தளவு அழுத்தம் கொடுத்த போதும் சிறு அசைவு கூட இல்லை மறுமுனையில். கரடிகளின் தாக்கத்தால் இறங்கிக் கொண்டிருக்கும் பங்கு மதிப்பு வரைபடத்தில் பாதாளம் நோக்கிய புள்ளியில் என் உணர்ச்சிகள் பேயை போல் நிற்கின்றன. மறுமுனையில் எளிய என் உரு நிழலின் எடையை ஒத்திருக்கிறது. சொல்லி தீராத நாட்குறிப்பின் பக்கங்களில் முதல் பத்தியை மேற்கண்டவாறு தொடங்குகிறேன். கல்லூரி காணாத நாள் இன்று. நேற்றைய நாளின் கொடூரம் இன்றைய காலையை இருளுக்கு உள்ளாக்கியது. பொழுது விடிகையில் எழாத உடல் பொழுதெல்லாம் உற்சாகத்தோடு இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. முதல் வேலையை ஓரளவு நிறைவோடு செய்து முடித்தேன். பிற்பகலில் தூறிய ஓரளவு மழையைப் போல. சூரியன் ஒளிந்துக் கொண்ட நாட்களில் இன்றும் சேரும். அம்ருதா இதழில் பர்மா குறித்து மு.இராசேந்திரன் எழுதிய கட்டுரை

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில்