முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு அலையில் பேசலாம் என்றே அலைபேசியை எடுத்தேன். நடுங்குகிற என்ன

மலர்: அத்தியாயம் ஒன்று

1 காத்திருக்கும் நேரம் கூடிக் கொண்டே போனது. கலந்தாய்வு எப்போ தொடங்கும் என தெரியவில்லை. காலை எட்டு மணியில் இருந்து நின்று கால் வலிக்க தொடங்கியது. பரந்து விரிந்திருந்த ஆடிடோரியத்தின் பக்கவாட்டு வாசலின் முன்பு ஆயிரக்கணக்கில் மாணவர் திரள். கையில் பைல்களோடும் கண்களில் கனவுகளோடும். அம்மாக்கள் , அப்பாக்கள் , சிலருக்கு தாத்தா, பாட்டி, கார்டியன் இப்படி. மஞ்சள் நிறப் பூக்களும் உதிர்ந்த இலைகளின் சருகுகளும் கலந்து அந்த இடத்தை நிரப்பி இருந்தது. முதல் அறிவிப்பு வெளியானது. மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிந்து நிற்க சொல்லி. கட்ஆப் மேலிருந்து கீழ் நோக்கிய வரிசையில். மாணவர்கள் எதற்கோ கட்டுப்பட்டவர்கள் போல அறிவிப்பைத் தொடர்ந்து பரபரப்போடு வரிசை பிரிந்து நின்றோம். அதிகபட்ச மதிப்பெண்ணிலிருந்து அதை விட 20 குறைந்த மதிப்பெண் வரை முதலில் உள்ளே அழைத்தார்கள். எல்லோரும் பி.காம் எடுக்க விரும்பினோம். முதல் இருபதில் என் பெயர் இருந்ததில் வியப்பேதும் இல்லை. பத்து , பன்னிரண்டு வகுப்புகளில் படிக்கும்போது மதிப்பெண் தான் எல்லாமும் என்று சொல்லித் தரப்பட்ட அறிவுரைகளினால் படித்து கொண்டே இருந்தத

இழப்பு (சிறுகதை)

மழையிருட்டு. மின்சாரம் தடைப்பட்டு போனது. நான்கு தெருக்கள் இருபுறமும். ஒன்றிணைக்கும் மையச் சாலை. கண்மாயை ஒட்டி இரண்டு வளைவு. மொத்த ஊருமே அவ்வளவு தான். ஒரு பெரிய கண்மாயின் பரப்பு கூட தேறாத நிலம். பதட்டம். சீதாவைச் சுத்தி இரண்டு மூணு பேரு மட்டுமே. “ஆம்பிளையாளுக யாரும் இல்லையா...” சாந்தியின் குரல் வளவு வாசலில் நீர் ஒழுகும் சத்தத்தை தாண்டி ஒலித்தது. கண்ணப்பனுக்கு பத்து வயது. தன்னுடைய தங்கச்சியை அம்மா சுமந்துக் கொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் முன்பே தங்கச்சி தான் என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். பின்கட்டில் குடியிருக்கும் இலட்சுமி அக்கா வம்பிழுக்கும், “அது தம்பி பாப்பா டா”. அம்மாவும் விளையாட்டாய் ஆமோதிப்பாள். “இல்லை, அது தங்கச்சி பாப்பா தான்” என உறுதியாய் நிற்பான் கண்ணப்பன். லட்சுமி அக்காவும் கையைப் பிசைந்துக் கொண்டு அம்மாவின் கால்மாட்டுக்கு பக்கத்துல நின்றுக் கொண்டிருந்தாள். சாந்தி கண்ணப்பனைக் கூப்பிட்டு, “ஓடி போய் ஒத்தையண்ணன் வீட்டுல ஆளுக இருந்தா, அம்மாவுக்கு வலி வந்துருச்சுன்னு சொல்லி கூட்டிட்டு வாப்பா” என அனுப்பி வைத்தாள். நுனி கூர்மையாக இருக்கும் குடையை எடுத்துக் கொண்டு