முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருக்கானது ஏழு தேசங்களின் அரியணை? - கேம் ஆப் த்ரோன்ஸ் ஒரு பார்வை

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தொலைகாட்சி தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பிற்கு பாத்திரமானார்கள் இந்த தொடரின் நாயகர்கள். இந்த தொடர் எளிதில் வசீகரிக்க கூடியது. மொத்தம் எட்டு சீசன்களில் 73 எபிசோட்கள். இப்போது தான் நீங்கள் முதல் பாகத்தின் எபிசொட் பார்க்க தொடங்குகிறீர்கள் எனில், மொத்த சீசனுக்கமான நேரத்தை முன்னரே ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மற்ற வேலைகளை இது திசை திருப்பக் கூடும். அவ்வளவு சுவாரசியமான கதை தொடர். அந்த சுவாரசியத்திற்கு காரணம்  தொடரில் நடமாடும் மனிதர்கள். அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு. பேராசை, வன்மம், அதிகார போதை, செல்வம், பாலியல் வேட்கை என எதுவெல்லாம் மனிதனைத் திசை திருப்பக் கூடியதோ எதுவெல்லாம் அவனை சிறைப்படுத்த கூடியதோ பிறழ்ந்து சிந்திக்க செய்கிறதோ அதுவெல்லாம் தான் இந்த தொடர் முழுவதையும் கோர்க்கும் இழைகள்.
Game Of Thrones | OSN
மனிதர்கள், கதைகள், பேய்கள், அரியணை, போர் -இவை தான் கேம் ஆப் த்ரோன்ஸ். ஏழு ராஜ்ஜியங்களும் ஒரு அரியணையின் கீழ் ஆட்சி செய்யப்படுகிறது. Mad King ற்கு பிறகு முறையான வாரிசு என அரியணைக்காக போராடும் டேநேரியஸ் தான் ஒட்டுமொத்த தொடரின் ஹீரோ. ட்ராகன்களின் தாய். ஜானின் பிறப்பு குறித்து அறியும் முன்பு வரைக்கு அவன் மீது மாசற்ற காதலோடு இருப்பவள். அதிகாரத்திற்கு இடையூறு எனும் போது மனிதர்கள் மாறி விடுவது உண்டு. 
Has 'Game of Thrones' Become Too Predictable?
அரியணை கனவுகள் பலருக்கும் உண்டு. அரியணை தக்க வைக்க விரும்புவோரையும் சேர்த்து தான். அதற்கான வழி போர். ஏழு அரசுகளும் சிதையும் வெஸ்டோரோஸ்(அரியணையை தாங்கி நிற்கும் தலைநகரம்) நகரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றன. லிட்டில்பிங்கர், வேரிஸ், மேய்ஸ்டர் என சதிப் பின்னல்களில் அரியணைக்கான போர் இன்னும் சிக்கல்களாக உருமாறுகின்றன.

ஏழு ராஜ்ஜியங்களின் மன்னர்களும் அரியணைக்கு ஆசைப்படுகையில் அவை ஒவ்வொன்றிலும் ஏற்கனவே இருக்கும் ஆட்சியைக் கைப்பற்ற இன்னும் சிலர் போராடுகின்றனர். இப்படியாக அதிகாரத்துக்கான போரில் சிக்கும் அத்தனை மனிதர்களும் அதன் சதுரங்கத்தில் தனக்கான playtime வரை விளையாடப்பட்டு வெட்டி சாய்க்கப்படுகின்றனர்.

அரியணைக்கான போர் ஒரு கோணம் என்றால் இறப்பிற்கும் வாழ்விற்குமான போர் மறுபுறம். wall என்பது செமயான கான்செப்ட். இறந்து போன மனிதர்களை whitewalkers என்னும் பேய்களாக எழுப்பும் NightKing ற்கும் உயிர்த்திருப்பவர்களுக்கும் ஆன அச்சுறுத்தும் சண்டை மற்றொரு கோணம்.
Here Are Eight Predictions For Season 8 Of 'Game Of Thrones'
வலுவான கதையமைப்பு. மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு பிரேம் கூட பிந்தைய கதையின் திருப்பமாக அமைந்துவிடும். நம்மை கதாபாத்திரத்தோடு ஒன்ற செய்து நாம் ஒரு அணியை பார்வையாளராக விரும்பத் தொடங்கும்போது  கருணையே இல்லாமல் அவர்கள் கொலை செய்யப்பட்டு விடுவார்கள். நம்பிக்கையற்று இருக்கும் போது இன்னொரு கை உயரும். மீண்டும் ஆட்டம் தொடங்கும். நாம் பெட் கட்டும் குதிரை தோற்பதே நம்மை அடுத்த எபிசொட் நோக்கி நகர்த்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இதை ஒரு குடும்பத்தின் கதையாக பார்ப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். ஸ்டார்க்கின் குடும்பம். முதல் எபிசோடில் மன்னரை வரவேற்கும் போது சேரும் குடும்பத்தின் உறுப்பினர்கள் சிதறி பிரிந்து விழுந்து இறந்து மீண்டு சேர்ந்து மீண்டும் உதிர்கிற கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் சந்திக்கிற சூழல்கள் மூலம் பெறுகிற குணங்கள், கற்றுக் கொள்ளும் பாடங்கள், எடுக்கும் முடிவுகள் என புனைவு நிரம்பிய நீண்ட குடும்பக் கதை. இந்த பார்வை எனக்கு பிடித்திருக்கிற காரணம் குடும்பத்தில் யாரும் இயல்பிலேயே மன்னராகும் கனவு கொண்டவர்கள் அல்ல. ஆனால் அந்த கனவு கொண்டவர்களால் பாதிக்கப்படுபவர்கள். அதனால் தங்கள் வாழ்வின் போக்கைத் தீர்மானித்துக் கொண்டவர்கள். ஆர்யா, ஸான்சா, பிரான், ராப், ரிக்கான், ஜான்(?) என ஸ்டார்க்கின் வாரிசுகள் வெவ்வேறு வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  
Game of Thrones family tree: How are the Starks and Targaryens ...
டேநேரியஸ், ட்ராகன்களின் தாய். ஒரு நல்ல கேரக்ட்டர் ஆர்க். அவளுடைய எழுச்சியில் ஆரம்பித்து வீழ்ச்சி வரை. டிரியன் லானிஸ்டர் இன்னொரு சிறந்த பாத்திர படைப்பு. இப்படி எல்லா பாத்திரங்களையும் குறிப்பிட முடியும்.

வன்மம், காமம் என இரத்தமும் யுத்தமும் தொடர் நெடுக பார்க்க கிடைக்கும். மெல்லிய மனசு கொண்டவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய தொடர்.

படைப்பு ரீதியாக தன்னுடைய உச்சத்தை பார்வையாளர்களின் உணர்ச்சி மாறுதல்களில் நிலைப்படுத்திக் கொள்கிறது தொடர். எவ்வளவு நேசிக்கிறோம் என்றால் அதன் ஒரு பகுதியாகவே, ஒரு காட்சி நமக்கு நேர போவதாகவே, நாம் அதன் தாக்கத்தை நுகரப் போவதாகவே ஆட்பட்டுவிடுவோம். அது தான் படைப்பின் வெற்றியும் கூட.

நெட் ஸ்டார்க், ராப், கேட், ட்ராகன், தியான், டிரியன், லியன்னா மோர்மன்ட் என எல்லோருக்குமாக அழுது தீர்த்தேன். செர்சீ, டய்வின், ரூஸ்போல்டன், லார்ட் ப்ரேய் என வில்லன்களின் பட்டியலில் கொதித்தும் கிடந்த மனசு nightking பார்த்து பயப்பட தொடங்கியது. பதட்டத்தின் உச்சியில், போரில் ஜெயிக்க செய்த ஆர்யாவிற்கு நன்றி.

இந்த தொடரின்  இறுதிக்கட்டம் பலராலும் விமர்சிக்கப்பட்ட ஒன்று. பேரழிவை உண்டாக்கிய கலீசி ஜான் கரங்களாலேயே கொல்லப்படுவாள். அதற்கான தர்க்கபூர்வ காரணங்கள் இருந்தாலும் படைப்பின் வழக்கமான இறுதி மகிழ்ச்சியான நொடிகளைப் போல கலீசியையும், ஜானையும் சேர்த்து வைத்துப் பார்க்கவே விருப்பப்பட்டு விடுகிறோம். படைப்பில் கூடவா நிஜம் தேவை. தேவை தான் போல.
Game Of Thrones' Season 8, Episode 6 Review: A Good Series Finale ...
அரியணை ட்ராகன் தீயிற்கு இரையாகும். கலீசி கொல்லப்பட்டது அதனால் தான் என அதற்கும் தெரிந்திருக்கும் போல. 
Why Drogon destroyed the throne, and where he may have taken ...
கற்பனையும் நேர்மையான பாத்திர வடிவமைப்பும் கதைக்கு வலு செய்கின்றன.

தனிப்பட்ட முறையில் நான் அந்த ராஜ்ஜியத்தில் வாழ்ந்துப் பார்க்கவே பெரிதும் விரும்புகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...