முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலினால் ஆதல்


அவள் : அப்புறம்
அவன் : ஒண்ணும் இல்ல
அவள் : ஒண்ணுமே இல்லையா...
அவன் : ஆமா. ஒண்ணுமே இல்லை
அவள் : சரி வச்சுடுறேன்
அவன் : இல்லை இல்லை இருக்கு
அவள் : இல்லையா இருக்கா
அவன் : இருக்கு
அவள் : அப்ப சொல்லு
அவன் : எல்லாமே நீ தான்
அவள் : வேற
அவன் : நீயின்றி எதுவுமில்லை
அவள் : வேற
அவன் : உன்னால் தான் நான் வாழ்வது
அவள் : வேற வேற புதுசா ஏதாவதுடா
அவன் : புதுசாவா...
அவள் : ம்
அவன் : ஆசைகள் கோடி
அவள் : ம்
அவன் : அதை நிறைவேற்ற நீ வாடி
அவள் : போடா
அவன் : நீ வரலைனா நான் வருவேன் தேடி
அவள் : ஹா... ஹா...
அவன் : உன் சிரிப்பில் நான் உடைந்த ஜாடி
அவள் : சூப்பர்டா
அவன் :

நீ என் வாழ்வில் நுழைந்த மறுகணம்
நான் தொலைகிறேன் தினம் தினம்
நீயின்றி நானிங்கு வெறும் பிணம்
நீ தான் எனைச் சூழும் மலர்வனம்

அவள் : பாட்டாவே பாடுறீயா...

கண்கள் கொண்டு சிறை பிடித்தாய்
வண்ணங்கள் காட்டி விடுதலை கேட்டேன்
வார்த்தைகள் உதிர்த்து வலை விரித்தாய்
விரும்பி நானும் விழுந்து விட்டேன்

கைக்குட்டை நூலாய் சுருக்கி விட்டாய் - உன்
கைமீறி போக நான் விரும்பவில்லை
மூச்சுக் காற்றில் நனைய செய்தாய்
மூன்று நாளாய் பிடித்த தடுமன் அகலவில்லை

கனவில் வந்து படுத்துகிறாய்
காலையில் அழைத்து சிணுங்கிறாய்
கைபேசி அணைத்திருந்தேன்
அதனால் அழைப்பை ஏற்கவில்லை - நேரில்
கண்டால் கோபம் கொண்டு முகத்தை திருப்புகிறாய்

செல்ல சண்டைகள் நீ செய்கிறாய்
கடைசியில் காலில் விழுவது
நானாகவே இருக்கிறேன்
இப்போதும் எப்போதும்

வதைத்து சிதைத்து
என்னை கொல்கிறாய்
உன் வத்தல் குழம்பில்
நான் ஊறி திளைக்கிறேன்

என்ன தான் முடிவு சொல்கிறாய்
முடியை பிய்த்து
நான் சிந்திக்கிறேன்
நான்
சிந்திக்கிறேன்

அவள் : கலக்கிட்டடா.... ஓ... டைம் மூணாயிருச்சு. நான் காலையில திரும்பி கால் பண்றேன். டேக் கேர். பை

அவன்: திரும்பவுமா

-பிரபா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோ...

பேரன்பாளனின் சாலை!

இரு விழிகள். முடிவுகளற்ற சுழல் பாதை போல இருமை சூழ்ந்து அதன் மாய வலைக்குள் ஈயை போல் சிக்க வைக்க முயற்சிக்கின்றன. மேலும் கீழும் தீட்டப்பட்ட கருப்பு பட்டைகள் என்னை மட்டும் நோக்கு என கவனக்குவியலைத் தன்வயப்படுத்துகின்றன. மிக கூர்மையான மூக்கின் பக்கவாட்டுத் தோற்றம் சாலையோர பூங்காவினை விட்டு செல்ல மனமில்லாது பொழுது சாய்ந்த பின்னும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவன் அம்மா வேலை முடித்து அழைத்து செல்ல கூப்பிடும்போது 'ஒரு தடவ' என கடைசியாக விளையாடிய சறுக்கு பலகையை ஒத்திருக்கிறது. நான் அச்சிறுவன். கவனமாக உருண்டு வரும் நீர்த்துளிகளில் ஒன்று மட்டும் சிறிது அழுத்தத்தோடு விழுந்துவிட்டதால் பதிந்த பள்ளம் போலான சிறு குழி மூக்கிற்கும் இதழ்களுக்கும் நடு மையத்தில். இதழ்கள் துருத்திக் கொண்டிருக்க இலாவகம், இருப்பதிலேயே மிக உயரமான மலைமுகட்டின் சிறு நுனியில் தொங்கி கொண்டிருந்தாலும் பற்றிக் கொள்ளும் அளவுக்கு பிளவுகளை வழங்கும் இயற்கையின் கருணையை நிரவியது போலான தோற்றத்தை அளித்துவிடுகிறது. வடிவங்களுக்கு அப்பாற்பட்டது இயற்கை. இயற்கைக்கு உட்பட்டது அழகு. கவிஞர்களை நம்பாதே. பேரன்புக்காரன் பயணிக்கும் சாலையில் ...

ஒரு கடிதம்

அன்பின் பிரபாவுக்கு ,      நீ நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்த நாட்களின் அழுத்தத்தில் இருந்து விலகி நிற்கும் வழி தெரியாமல் இருந்த எனக்கு உன் குறுஞ்செய்தி சிறிது விடுதலை தந்தது. ஒற்றை அறைக்குள் எதிரொலிக்கும் என் மனதில் இருந்து எழும் ஓசை அச்சம் கொடுக்கிறது. சமூக வலைத்தளங்கள், செய்தி நேரலை எதுவும் உவப்பானதாக இல்லை. வாசிப்பது மட்டுமே இப்போதான ஆறுதல். அதிலும் முழு மனதாக இணைய இயலாமல் அந்தக் கதையினை இந்தச் சூழலுக்கு பொருத்திப் பார்த்து உடைந்து போகிறேன்.       உதாரணத்திற்கு சொல்கிறேன். நோர்வீஜியன் வுட் அத்தியாயங்களில் டோருவும் நவோகாவும் நடந்து போகிற தருணங்களில் அவர்களுக்கு முக கவசம் அணிந்ததாக நானே கற்பனை செய்துக் கொள்கிறேன். நவோகா சிகிச்சைக்காக தனித்து இருப்பது அவளை தனிமைப்படுத்தும் அசாதாரண சூழல்- கிருமிகளால் விளைந்தது என அச்சம் கொள்கிறேன். மிடோரியைத் தொடாது இருக்க டோருவை நானே விலக்கி வைக்கிறேன். என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது எனது அதீத அச்சமும் பதட்டமுமே இதற்கு காரணம் என்று. சோர்ந்து விழுகிறேன்.      உன்னோடு...