முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வரைந்த காதல் (சிறுகதை)

குளிர்காலத்திற்கு முன் பகுதி போல் தோன்றுகிறது. ஆகத்து மாத கால நிலை குறித்து இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதோடு தொடர்புடைய இரண்டு விஷயங்களை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒன்று, 21 ஆம் நூற்றாண்டில் கதை எழுதும் இளைஞன் கால வர்ணனை குறித்துப் பெரிதாக அறிந்திருக்க வாய்ப்பேதும் இல்லை. இரண்டாவது, 21 ஆம் நூற்றாண்டில் எந்தக் காலமும் வரையறுக்கப்பட்ட பருவமாய் இருப்பதில்லை. கோடையில் மழையும் மழையில் வெயிலுமாய் நிச்சயமற்ற போக்கைக் கடைப்பிடிக்கின்றன. இள வெயிலைப் போர்த்திக்கொண்ட பகல், ஈரக் காற்றை தன் மீது நிரவ அனுமதித்திருந்தது. தொடர்வண்டியில் பொருத்தப்பட்ட சாளர கம்பிகள் பார்வை வீச்சைத் துண்டாடியபடி காட்சிகள் கடக்க அனுமதித்துக் கொண்டிருந்தன. ஆறு பேர் அமரும் இருக்கையில் தன்னந்தனியே நான் மட்டும் சன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். பிற்பகலும் என்னைப் போலவே தன்மையைக் கொண்டிருந்தது. Orphan Train By Holly J. Kroening      உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. என் இருக்கைக்கு எதிரில் காலியான இடத்தை நிரப்ப ஒரு பெண் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பலாம். ஆனால் நான் அப்படி இயக்க விர

பேய்ச்சியுடனான உரையாடல் - புத்தக விமர்சனம்

ஒவ்வொரு படைப்புக்கும் உயிர் உள்ளது என நம்புகிறவன் நான். எழுத்தாளர் திட்டமிட்டோ திட்டமிடாமலோ அந்த உயிருக்கான உருவத்தை அளித்துவிடுகிறார். அந்த உயிரை நீங்கள் அணுகும் போது உங்கள் தன்மைக்கேற்ப உங்களோடு அது உரையாடலை நிகழ்த்தும். நீங்கள் அதற்கு ஆட்படலாம் அல்லது தாண்டிச் செல்ல முயற்சிக்கலாம். அதனோடு மூர்க்கமாகச் சண்டை நிகழ்த்தலாம். ஆனால் ஒரு போதும் மறுதலிக்க முடியாது. பேய்ச்சியின் உடனான உரையாடல் என்னை அச்சப்படுத்தியது. உடைந்து அழுக வைத்தது. மருண்டு சுருங்கி, இரவுகளில் நாக்கைத் துருத்தி யாரையாவது உடன் அழைத்துச் செல்ல வைத்தது. அப்போயின் வடிவில் என்னையே பார்க்க செய்தது. பேய்ச்சியின் பேராற்றல் முன்பு மண்டியிட்டுக் கதற வைத்து தண்ணென்ற அருவியாக தலை மேல் கொட்டித் தீர்த்தது. எந்த புதிய களத்திலும் வாசிக்கத் தொடங்கும்போது ஏற்படும் அறிமுக சிக்கலைத் தவிர வாசித்து முடிக்கும் வரை வேறு எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை. மொழியின் சரளம் அவ்வாறானது. இருவேறு காலகட்டங்களிடையே பயணிக்கும் கதை. இரண்டிலும் பொதுவான மனிதர்கள். ஒவ்வொருவருக்குமான பின்கதை, அவர்களின் இன்றைக்கான இடத்தை அடைய அவர்கள் கடந்து வந்த பாதை, அல்லது முன்