முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாருக்கானது ஏழு தேசங்களின் அரியணை? - கேம் ஆப் த்ரோன்ஸ் ஒரு பார்வை

உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தொலைகாட்சி தொடர் கேம் ஆப் த்ரோன்ஸ். கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பிற்கு பாத்திரமானார்கள் இந்த தொடரின் நாயகர்கள். இந்த தொடர் எளிதில் வசீகரிக்க கூடியது. மொத்தம் எட்டு சீசன்களில் 73 எபிசோட்கள். இப்போது தான் நீங்கள் முதல் பாகத்தின் எபிசொட் பார்க்க தொடங்குகிறீர்கள் எனில், மொத்த சீசனுக்கமான நேரத்தை முன்னரே ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மற்ற வேலைகளை இது திசை திருப்பக் கூடும். அவ்வளவு சுவாரசியமான கதை தொடர். அந்த சுவாரசியத்திற்கு காரணம்  தொடரில் நடமாடும் மனிதர்கள். அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு. பேராசை, வன்மம், அதிகார போதை, செல்வம், பாலியல் வேட்கை என எதுவெல்லாம் மனிதனைத் திசை திருப்பக் கூடியதோ எதுவெல்லாம் அவனை சிறைப்படுத்த கூடியதோ பிறழ்ந்து சிந்திக்க செய்கிறதோ அதுவெல்லாம் தான் இந்த தொடர் முழுவதையும் கோர்க்கும் இழைகள். மனிதர்கள், கதைகள், பேய்கள், அரியணை, போர் -இவை தான் கேம் ஆப் த்ரோன்ஸ். ஏழு ராஜ்ஜியங்களும் ஒரு அரியணையின் கீழ் ஆட்சி செய்யப்படுகிறது. Mad King ற்கு பிறகு முறையான வாரிசு என அரியணைக்காக போராடும் டேநேரியஸ் தான் ஒட்டுமொத்த தொடரின் ஹீரோ. ட்ராகன்களின் தாய்.

கெட்ட வார்த்தை கேட்பது என்பது...!

கெட்ட வார்த்தை பேசுவீர்களா? இந்த கேள்வியிலிருந்து தொடங்குவோம். ஆமாம், இல்லை, சில நேரங்களில் என்ற மூன்று ஆப்சன். எந்த வகை நீங்கள்? கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல் என்பது காலந்தோறும் தவறான, பொதுவில் பேசக் கூடாத, இழிவான ஒன்றாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் தெரிந்தே அது மீறவும்படுகிறது. அரசு பள்ளியில் கெட்ட வார்த்தைகளைப்  பேசுகிற மாணவர்களோடு படிக்க நேரும் என்று கான்வென்ட் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள், ஆட்டோ குறுக்க போனா கூட பேசும் நல்ல வார்த்தைகளை எதில் சேர்ப்பது என தெரியவில்லை. அரசு பள்ளிகளில் மட்டும் தான் கெட்ட வார்த்தைகள் புழங்குகிறதா. சமூக வலைத்தளங்கள் அறிமுகம் முகத்தை மறைத்துக் கொண்டு சமூகத்தோடு உரையாடும் வாய்ப்பை வழங்குகிறது. இங்கு வழக்கத்தை மீறுகிற கலகக்காரர்கள் கொண்டாடப்படுவர். அப்படியான அங்கீகாரம் கெட்ட வார்த்தைகளுக்கான கட்டுகளைத் தளர்த்த தொடங்கியது. இன்றைக்கு சமூக வலைத்தளத்தில் கெட்ட வார்த்தையைப் பேசுவது என்பது பெரிய குற்றம் இல்லை.  சரியான பகடியோடு கோர்க்கப்படும் வசனங்கள் கொண்டாடப்படுகின்றன. பிடிக்காத அரசியல் எனில் வசவுகள் தாறுமாறாக பொழியப்படுகின்றன எதிர் பக்கத்தில் இர

மனிதர்களின் பேராசைக்கு இரையாகும் இயற்கை!

(ஓநாய் குலச்சின்னம்- ஜியாங் ரோங் - தமிழில்: சி.மோகன் - நூல் வாசிப்பு அனுபவம்) Courtesy: simonhaiduk “ஓநாய்கள் மனிதர்கள் அளவுக்குத் தீயவை அல்ல” நாவலில் இடம்பெறும் இந்த ஒற்றை வரி தான் ஒட்டுமொத்த கதையின் அடித்தளம். ஓநாய்களை சொர்க்கத்தின் தூதுவர்களாக வழிபடும் மங்கோலிய மக்களிடையே பணியாற்ற வரும் ஹேன் சீன மாணவர்களான ஜென் சென் மற்றும் யாங் கீ ஒரு ஓநாய் குட்டி வளர்க்க முயற்சி செய்யும் கதை தான் ஓநாய்குலச்சின்னம். மேய்ச்சல் நிலத்தின் அரசனான ஓநாய்கள் எவ்வாறு ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்பட்டன, மனிதர்களின் பேராசை, வளர்ச்சி, அதிகாரம் போன்றவற்றையும் இதன் காரணமாக சிதைந்த இயற்கையையும் கதை பேசுகிறது. அடிப்படையில் இந்த நூல் ஒரு தன் வரலாற்று நூல் வகையை சேரும். சீனாவில் ஏற்பட்ட கலாச்சார புரட்சியின் விளைவாக கிழக்கு உள்-மங்கோலியாவிற்கு அனுப்படும் ஜியாங் ரோங்-இன் வாழ்கை அனுபவங்களே இந்த நாவல். ஜென் சென் மங்கோலியர்கள் வழிபடும் ஓநாய்களை நேசிக்க தொடங்குகிறான். ஓநாய்களைப் பார்த்து பயப்படும் அவற்றை தீய சக்தியின் உருவமாக பார்க்கும் சீன மக்களிடையே இருந்து அவன் வந்திருப்பதால் தீயவற்றை செய்யும் ஓநாய்களை எப்படி இவர்களால்