முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்- நாவலுடனான பயணங்கள்

முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் ( Gabriel Garcia Marquez) மொழிபெயர்ப்பு: அருமை செல்வம் , அசதா காலச்சுவடு @2016 (மாய எதார்த்தவாத இலக்கியங்களில் பெரிதும் அறியப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் அவர்களின் ‘முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ என்கிற நாவல் குறித்தான பகிர்வு)      ஒரு நகரம் அது. அன்று திங்கட்கிழமை. கடந்த மூன்று நாட்களாக நடந்திருந்த கல்யாண ஆரவாரத்தின் முடிவுக்கும், காலை நிகழவிருந்த பிஷப் வருகைக்குமான இடைவெளியில் ஒரு கொலைக்கான திட்டமிடல் நடந்தேறுகிறது. பிஷப் வந்து சென்ற பிறகு கொலையும் நடந்தே முடிந்து விடுகிறது. அனேகமாக அவ்விடத்தில் இருந்த அனைவரும் கொலை குறித்து ஏதோவொரு வகையில் முன்பே அறிந்திருக்கின்றனர். அனைவரும் கொலை செய்ய முயற்சிப்பவர்கள் உட்பட அந்த கொலை நடைபெறாமல் இருக்கவே முயற்சிக்கின்றனர் தம்மளவில். எல்லாவற்றையும் மீறி நடந்தேறும் நிகழ்வின் பாதிப்பு கால் நூற்றாண்டுக்கும் மேலாக உயிர்ப்புடன் இருப்பது விதியின் பலத்தை பேச செய்கிறது.      கொலை செய்யப்பட்டவனுக்கு நீண்ட கால நண்பன் அந்த கொலையோடு தொடர்புடைய எல்லோரையும் அவன் உட்பட, ந

நினைவுகள் காலத்தின் தூதுவர்கள்

சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு (தமிழில் கே.வி.ஷைலஜா) பகிர்வு:  "ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை, அது உங்களுக்காகப் பொத்தி வைத்துக் காத்திருக்கும் எப்போதும்" - பாலசந்திரன் சுள்ளிக்காடு வாழ்ந்துப் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள ஒரே வழி என்று குறிப்பிடும் பாலசந்திரன் வாழ்வின் இரகசியங்களை காலத்தில் அவை ஒளிந்து விளையாடும் மாயங்களைப் பதிந்து செல்கிறார். தொடர்வண்டி பயணமொன்றில் துணையாக படித்த சிதம்பர நினைவுகள் உலகைக் குறித்தும் மனிதர்களைக் குறித்துமான பார்வைகளை ஒரு முறை நினைவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறது. பாலசந்திரன் மொழி அவரோடு நம்மையும் சேர்த்து பசியின் கொடுமையைத் தாளாது சாலையில் பரதேசியாக அலைபவனாகவும் கவிதைக்காகவும் கொள்கைக்காகவும் வீட்டைத் துறப்பவனாகவும் ஐந்து ரூபாய்க்கு சிவாஜி கணேசனின் பட விளம்பரத்தை வாசித்த பையன் 20 வருடங்களுக்குப் பிறகு அவர் கையாலே மது பரிமாறுவதை ஏற்கிறவனாகவும் இப்படியாக மகிழ்ச்சி, துயரம், சபலம், அவமானம், அன்பு, உறவு என வாழ்வை பிணைத்திருக்கும் சரடுகளோடு பயணிக்க