முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வியர்வையால் நிரம்பும் சுவர்கள்

செவப்பு கல் அருகே இன்னுமொரு செவப்பு கல் மற்றுமொரு செவப்பு கல் இன்னும் ஒன்று அடுத்து ஒன்று அடுக்கி கொண்டே நகர்கிறார் ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரே மாதிரியான இடைவெளியை அனுமதித்த படி மண்ணும் சிமண்டும் கலந்த குவியலை அகண்ட தட்டில் கொஞ்சம் அள்ளிக் கொண்டு தனது கூம்பு கரண்டியை வலக்கையில் தாங்கியவாறு செவப்பு கற்களுக்கிடையே அரக்கை நிரப்பியும் பூசியும் தடவியும் நகர்கிறார் மேல் வரிசை அடுக்க வெட்டப்பட்ட நூலொன்று சரியாய் கட்டப்பட்டிருக்கிறது சீராய் கட்டடம் எழுப்ப அடிக்கொருதரம் டேப்பை நீட்டி அளக்கிறார் இடுப்பளவு வரை எழுந்து நிற்கும் குட்டிச்சுவர் சிரித்துக் கொண்டே மேல்நோக்குகிறது பொழியும் வெய்யில் வியர்வையை வழியச் செய்கிறது கண்டுகொள்ளாம தனது வேலையை செய்பவரின் கிழிந்த பனியனில் படிந்திருக்கிறது வியர்வை காய்ந்த பின் தேங்கும் உப்பு சூரியன் மேற்கே திசை மாற அவர் நிழல் கிழக்கே சாய்கிறது சூடான தேநீரால் நிரம்பிய வயிறு மீண்டும் ஏறச் சொல்கிறது சுவர்களுக்கிடையே இன்னிக்கான வேலை நேரம் முடியப் போவதற்கான அறிகுறியுடன் முடிக்க வேண்டிய வேலைகளின் நினைவு

மழை விட்டுச் சென்ற குளிர்

நீர்க்குமிழிகளின் நேசப் புன்னகையில் பிரதிபலிக்கிறது உன் முகம் சிறு காற்றசைவில் உதிர்ந்து விழும் இலைக் குவியலில் சலசலக்கிறது உன் மெளனம் மழை விட்டுச்சென்ற குளிரை மறக்கச் செய்கிறது உன் நெருக்கம் குளக்கரை கூழாங்கற்கள் சேகரித்த உன் நினைவுகள் தேங்கிடும் மழைச்சாரல் வழியும் மிகுதி உன் மகிழ்வுகள் மின் கம்பியில் படபடக்கும் இரட்டைவால் குருவி உன் குறும்புகள் குவளையின் இறுதி துளி தேநீர் உன் வசவுகள் உதிர்ந்த சில துளி சிரிப்புகள் உன்னால் நிகழ்த்தப்பட்ட என் மரணங்கள் மழை விட்டுச் சென்ற குளிர் நீ மறைகையில் உறைந்த என் மனம் கண்டெடுத்த உன் பிம்பம் கசக்கிய காகிதப் பூ கீறப்பட்டு கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு கிடந்தது உன் ஓவியம் சிதறிக் கிடக்கிற உன் தேகத்தில் கொட்டப்படுகின்றன அனுதாபங்கள் நீதி உரிமை பாதுகாப்பு ஒலிக்கும் குரல்களில் மறைந்திருக்கிறது அவலம் போதும் நிறுத்திக் கொள்ளச் சொல்வோம் இச்சமூகத்தை இவர்கள் நல்லெண்ணத்தினால் மூச்சு முட்டுகிறது திணறும் எனக்கும் திகைக்கும் உனக்கும் கூட

உங்களின் நான்

உங்கள் முலைகளில் பால் அருந்தியவன் நான் உங்கள் மடிகளில் உறக்கம் தேடியவன் உங்கள் கைகளில் கோர்த்திருக்கின்றன என் விரல்கள் உங்கள் பாசத்தில் உணவு உருவாகிறது எனக்கு உங்கள் இடுப்பில் சுற்றியிருக்கின்றன என் கைகள் உங்கள் மதிப்பெண்களில் நிறைந்திருக்கிறது என் சான்றிதழ் உங்கள் நல விசாரிப்புகளில் உணர்கிறேன் என் வாழ்வை உங்களை விட்டு கட்டமைக்க முடியவில்லை என் காலத்தை ஏன் என் கவிதைகளில் கூட தொனிக்கிறது, உங்கள் சிரிப்பு. -பிரபா

இரவெனும் பறவை

இரவெனும் பறவை கொத்தி கொத்தி களித்திருக்கிறது கோடி வெளிச்சங்களை வானமெனும் கூரைமேல் விரித்திருக்கிறது தன் சிறகுகளை பகலவன் வரும்வரை விழித்திருக்கிறது நிலவு இரவுக்கு துணை நிசப்தங்களே அதன் அகவல் அணைக்கிறது பனியெனும் போர்வை கொண்டு தன்னைப் போலவே தனித்திருக்கும் உயிரிகளை போதும் நிறுத்திகொள் காலத்தேவன் குரல் கேட்கும் வரை பரந்திருக்கிறது, கடலாய் இரவெனும் பறவை... -பிரபா