முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏன் எம்.டி.வாசுதேவன் நாயர் ஒரு மாஸ்டர்? | இறுதி யாத்திரை நாவல் வாசிப்பு அனுபவம்! (சுருக்கமாக)

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இறுதி யாத்திரை நாவலை கோவையிலிருந்து திரும்பி கொண்டிருந்த பயணத்தின் போது வாசித்தேன். பாதி நாவல் மட்டுமே வாசிக்க முடிந்தது. வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள் காலையில் அதனை முடித்து விட்டு அடுத்து வாசிப்போம் என்ற நினைப்பில் படிக்கத் தொடங்கினேன். சற்று முன் தான் வாசித்து முடித்தேன். ஆனால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியவில்லை. எப்போதுமே ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் ஏனென்றே தெரியாத ஒரு அமைதி வந்து மனதில் அமர்ந்து கொள்ளும். அது நீடிக்கும் நேரம் அந்த புத்தகத்தின் செறிவைப் பொருத்தது. எம்.டி.வி ஏன் ஒரு மாஸ்டர் என்பதை இந்த நாவலின் வழியாக உணர முடிந்தது. ஆரம்ப அத்தியாயங்களில் யார் எதை சொல்ல வருகிறார்கள் என்பதைக் கிரகித்து கொள்ள சிறிது நேரம் எடுக்கிறது. ஒன்றிரண்டு முறை பின்னால் சென்று வாசிக்க நேரிடும். ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு தான். நாவலின் பேட்டர்ன் பிடிபட்டவுடன் இலகுவான வாசிப்புக்கு நாம் நகரத் தொடங்கிவிடுவோம். வரிகளுக்கிடையேயான சொல்லப்படாத அர்த்தங்கள் தான் நாவலின் எடையைத் தீர்மானிக்கிறது. அத்தனை ஆழமாக அதுவும் வெளிப்படையாக சொல்லாமலே வாசகருக்கு ஒன்றை புரிய வைக்க